Home Featured கலையுலகம் விக்ரம் அடுத்து ஏற்க இருக்கும் பரபரப்பான அந்த வேடம் என்ன?

விக்ரம் அடுத்து ஏற்க இருக்கும் பரபரப்பான அந்த வேடம் என்ன?

681
0
SHARE
Ad

vikram2சென்னை – ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தால் விக்ரமிற்கு பெரிய அளவில் ஏமாற்றம் கிடைத்துள்ள நிலையில், அடுத்த படத்தில் கட்டாயம் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இந்நிலையில், விக்ரம் பிரபுவை வைத்து ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் கூறிய கதை, விக்ரமிற்கு பிடித்துப் போக, உடனடியாக களத்தில் இறங்கியவர், நீண்ட தாடி, மீசையுடன்  காட்சி அளித்து வருகிறார்.

‘மர்ம மனிதன்’ என்று அந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், மற்றொரு செய்தியும் உலா வருகிறது.

இந்த படத்தில் விக்ரமுடன் வில்லனாக மோத இருப்பது வேறு யாரும் அல்ல விக்ரம் தானாம். அதிலும், குறிப்பிட்ட அந்தக் கதாபாத்திரம், திருநங்கை என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஒரு வேடத்தில் நடித்தாலே மனிதர் அதகளம் பண்ணிவிடுவார். இரட்டை வேடம் என்றால் கேட்கவா வேண்டும். மர்ம மனிதன் என்று வருவான் என்று இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.