Home Featured உலகம் “அமெரிக்காவிற்காகவே ஹைட்ரஜன் குண்டு” – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் விளக்கம்!

“அமெரிக்காவிற்காகவே ஹைட்ரஜன் குண்டு” – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் விளக்கம்!

716
0
SHARE
Ad

northkoreaபியாங்யாங் – சமீபத்தில் வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள ஹைட்ரஜன் குண்டு சோதனை, உலக நாடுகளை கடும் பதற்றத்திற்கு ஆளாக்கி உள்ளது. அதற்குக் காரணம், அந்த நாடு சோதித்துள்ள ஹைட்ரஜன் குண்டு, இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டை விட 25 ஆயிரம் மடங்கு சக்தி கொண்டது என்று கூறப்படுவதால் தான்.

இந்நிலையில், தாங்கள் மேற்கொண்டுள்ள ஹைட்ரஜன் குண்டு சோதனை குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறுகையில், “அமெரிக்கத் தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கையாகவே, ஹைட்ரஜன் குண்டு சோதனை நிகழ்த்தி உள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

hrdrogen Bombஇதற்கிடையே வட கொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.