Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு நடக்குமா? – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ஜல்லிக்கட்டு நடக்குமா? – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

501
0
SHARE
Ad

jallikattu759புது டெல்லி – ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று நடைபெற இருக்கிறது.

மத்திய அரசு அனுமதி வழங்கியதால், பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதால், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.