Home Featured கலையுலகம் ‘கோல்டன் குளோப்’ விருதை பழங்குடி மக்களுக்கு சமர்பித்த டி காப்ரியோ!

‘கோல்டன் குளோப்’ விருதை பழங்குடி மக்களுக்கு சமர்பித்த டி காப்ரியோ!

612
0
SHARE
Ad

the-revenantலாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சமீபத்தில் 73-ம் ஆண்டு ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், ‘தி ரெவணன்ட்’ என்ற படத்தில் நடித்ததற்காக லியானார்டோ டி காப்ரியோவிற்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது.

விருது பெற்ற பின் பேசிய டி காப்ரியோ, “இந்த பொன்னான நேரத்தில் நாங்கள் உலகில் உள்ள அனைத்து பழங்குடிகளின் வரலாற்றையும் ஏற்கிறோம், அவர்களின் கலாச்சாரத்தை மதிக்கிறோம். பூர்வக் குடி மக்களுக்கு எதிராக பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் நில ஆக்கிரமிப்புகளை கண்டிக்கிறோம்”

“பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக  நிலங்கள் வாங்கப்படுவதற்கு எதிராக போராட வேண்டும். இந்த நாளில்  உங்களுடைய குரல் உலகமெங்கும் ஒலிக்கும். வருங்கால சந்ததிக்காக நாம் இணைந்து இந்த உலகத்தை காப்போம். இந்த விருதை உலகில் ஆதாரவற்று கிடக்கும் அனைத்து பழங்குடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

Leo-1‘தி ரெவணன்ட்’ படத்தில் டி காப்ரியோ பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.