கோலோன் – ஜெர்மனியில் கோலோன் நகரில் புத்தாண்டு அன்று இரவு நூற்றுக்கணக்கான பெண்கள் மீது குடியேறிகள் நடத்திய பாலியல் வன்முறையால், அங்கு குடியேறிகளுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடியேறிகள் விவகாரத்தில் நாட்டு மக்களை மறந்து, அதிபர் ஏஞ்சலா மெர்கல் கடைபிடித்த கொள்கைகள் தான் இன்று ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறி, அவர் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதல் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐரோப்பா, குடியேறிகள் விவகாரத்தில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. தற்போது நாம் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் இருக்கிறோம். ஆனால், நாம் எதிர்பார்க்கும் அதிகாரம் நம் கைகளில் இல்லை. கோலோன் நகரில் அந்த இரவு பாதிக்கப்பட்ட பெண்கள் சந்தித்த மோசமான அனுபவத்தை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம். விரைவில் இதற்கு முடிவு கிடைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.