Home Featured நாடு 2016 முதல் நட்பு ஊடகங்களில் கண்காணிப்பைக் கடுமையாக்குவோம் – காலிட் எச்சரிக்கை

2016 முதல் நட்பு ஊடகங்களில் கண்காணிப்பைக் கடுமையாக்குவோம் – காலிட் எச்சரிக்கை

770
0
SHARE
Ad

khalid-abu-bakar-perhimpunan-8-meiகோலாலம்பூர் – நட்பு ஊடகங்களின் மூலமாக அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க இந்த ஆண்டு காவல்துறை அதில் அதிக கவனம் செலுத்த உள்ளது என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

நட்பு ஊடகங்களில் இருக்கும் வசதியை சரியாகப் பயன்படுத்த மலேசியர்களுக்கு போதுமான முதிர்ச்சியும் இல்லை என்றும் காலிட் குற்றம் சாட்டியுள்ளார்.

“2016 -ம் ஆண்டு முதல் குற்றங்களைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்தவிருக்கும் அதே நேரத்தில் நட்பு ஊடகங்களின் மூலமாக அதிகரித்து வரும் குற்றங்களையும் தடுக்கவுள்ளோம்” என்று இன்று காலை புக்கிட் அம்மானில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பேஸ்புக்கில் 14 மில்லியன் மலேசியர்கள் இருப்பதாக அனைத்துலக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள காலிட், அவர்கள் இணையதளங்களில் மிக மோசமான கருத்துக்களைப் பதிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நட்பு ஊடக வலைத்தளங்களில் மிக மோசமான கருத்துக்களைத் தெரிவிப்பதில் மலேசியர்களின் பங்கு அதிகம் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளதையும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

“நமது குடிமகன்கள் நட்பு ஊடகங்களில் எவ்வளவு முதிர்ச்சியின்றி நடந்து கொள்கிறார்கள் என்பது அந்த ஆய்வு மூலம் தெரிகின்றது. பொதுமக்களின் அமைதியைக் கெடுப்பது போலவும், மதசார்பான பிரச்சனைகளை உருவாக்குவது போலவும் இணையங்களில் கருத்துத் தெரிவிக்கும் அதீத ஆர்வலர்களை கைது செய்ய வேண்டும்” என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

எனவே நட்பு ஊடகங்களில் தேசத்தின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் பொதுமக்கள் யாரும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் காலிட் எச்சரித்துள்ளார்.