Home Featured நாடு தைப்புசத் திருவிழா: தயார் நிலையில் பினாங்கு வெள்ளி இரதம்!

தைப்புசத் திருவிழா: தயார் நிலையில் பினாங்கு வெள்ளி இரதம்!

565
0
SHARE
Ad

silver-chariot-readyஜார்ஜ் டவுன் – தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பினாங்கின் முக்கிய வீதிகளில் முருகப்பெருமானுடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவிருக்கும் 122 ஆண்டு கால வெள்ளி இரதம் தயாராகிவிட்டதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஏ.நாராயணன் கூறுகையில், வரும் ஜனவரி 23-ம் தேதி புறப்படவிருக்கும் வெள்ளி இரதத்தை தூய்மைப்படுத்துவது, மெருகூட்டுவது போன்ற பராமரிப்புப் பணிகள் அனைத்தும் கடந்த 1 மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜாலான் கெபுன் பூங்காவில் அமைந்திருக்கும் பாலதண்டாயுதபாணி ஆலயமும், அதனைச் சுற்றியுள்ள ஆலயங்களும் தைப்பூச நிகழ்விற்காகத் தயாராகி வருவதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தைப்பூச நிகழ்விற்கு தாங்கள் முழுவதும் தயாராகிவிட்டதாக கோவில் வீடில் நேற்று முன் தினம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டாக்டர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

படம்: நன்றி (The Star)