Home Featured கலையுலகம் “ரஜினியிடம் அடிவாங்குவதும் கௌரவம் தான்” – அக்ஷய்குமார்

“ரஜினியிடம் அடிவாங்குவதும் கௌரவம் தான்” – அக்ஷய்குமார்

565
0
SHARE
Ad

rajiniசென்னை – பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார், தமிழில் முதல்முறையாக ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். வில்லன் வேடத்தில் நடித்து வரும் அக்ஷய்குமார், சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “ரஜினியிடம் அடிவாங்குவதும் கௌரவம் தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “இவை எல்லாம் கனவில் மட்டுமே நடக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். அதையும் தாண்டி அவர் மிகச் சிறந்த மனிதர். இது (எந்திரன் 2.0) எனக்கு வேறு உலகமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அக்ஷய்குமார் நடித்து வரும் கதாப்பத்திரத்திற்கு முதலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தான் பேசப்பட்டு வந்தார். எனினும், ரஜினியின் வேண்டுகோளுக்கு இணங்க, அமிதாப் அந்த வேடத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.