கோலாலம்பூர் – பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் ரபிசி ரம்லி மற்றும் மீடியா ராக்யாட் இணையதளத்தின் நிர்வாகி சான் சீ கோங்கிற்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்திருந்த வழக்கில், சில விரிவான தகவல்கள் வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக நீதிபதி நோரைனி அப்துல் ரஹ்மான் இந்த விவகாரத்தில் மேல் விசாரணையை வரும் மார்ச் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இத்தகவலை நஜிப்பின் வழக்கறிஞர் மொகமட் ஹபாரிசாம் ஹாருனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி, பண்டார் துன் ரசாக்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், அரசு வழங்கும் எண்ணெய் மானியம் தொடர்பாக பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா ஆகியோர் பற்றி ரபிசி அவதூறான கருத்துக்களை வெளிப்படுத்தியதாக நஜிப் சார்பில் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.