Home Featured நாடு ஐஎஸ் -ல் உள்ள 8 மலேசிய சிறார்களை மீட்பது கடினம் – காவல்துறை கைவிரிப்பு!

ஐஎஸ் -ல் உள்ள 8 மலேசிய சிறார்களை மீட்பது கடினம் – காவல்துறை கைவிரிப்பு!

554
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – மத்தியக் கிழக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிவாத அமைப்புடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று வரும் 8 மலேசிய சிறார்களை மீட்டுக் கொண்டு வருவது தங்களது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “மக்களை நல்வழிப்படுத்துவதில் எப்போதும் நாங்கள் முடிந்தவரையில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றோம்”

“ஆனால், இந்த விவகாரத்தைப் பொறுத்த வரையில் அவர்களை (8 சிறார்கள்) மீட்டுக் கொண்டு வருவது எங்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice