Home Featured உலகம் ஜெர்மனி குடியேறிகள் விவகாரம்: எல்லைக் கட்டுப்பாட்டை நீட்டிக்கிறது டென்மார்க்!

ஜெர்மனி குடியேறிகள் விவகாரம்: எல்லைக் கட்டுப்பாட்டை நீட்டிக்கிறது டென்மார்க்!

769
0
SHARE
Ad

Denmarkகோபென்ஹேகன் – ஜெர்மனிக்கு அருகேயுள்ள தங்களது எல்லைகளில் 20 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க டென்மார்க்கின் டேனிஸ் அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, தனது அண்டை நாடான ஸ்வீடனைப் போல் 10 நாட்களுக்கு இடைக்கால எல்லைக் கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

எனினும், தற்போது இந்த முடிவை வரும் பிப்ரவரி 3-ம் தேதி வரை நீடித்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

இது குறித்து அந்நாட்டின் ஒருங்கிணைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவு எடுக்கப்பட்டாலும் கூட, மிகப் பெரிய அளவிலான கள்ளக் குடியேறிகள் டென்மார்க்கில் தஞ்சம் புகும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள கோலோன் நகரில் புத்தாண்டு இரவு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது அந்நாட்டில் உள்ள குடியேறிகள் பாலியல் வன்முறை நடத்தியதாக எழுந்த புகார்களை அடுத்து, தற்போது அங்கு பதட்டநிலை நிலவி வருகின்றது.

அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக ஜெர்மானியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.