Home Featured நாடு அல்தான்துன்யா கொலைக் குற்றவாளி சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு!

அல்தான்துன்யா கொலைக் குற்றவாளி சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு!

699
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மங்கோலிய அழகி அல்தான்துன்யா ‌ஷாரிபு கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அசிலா ஹாட்ரி தனது தண்டனைக்கு எதிராக சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு செய்திருக்கின்றார். இந்த வாரியத்தின் தலைவர் சிலாங்கூர் சுல்தான் ஆவார்.

Sirul-Azhar & Azilah-Hadriசைருல் அசார்-அசிலா ஹாட்ரி

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மற்றொருவரான சைருல் அசார் தற்போது ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவில் மரண தண்டனை இல்லையென்பதால் அவரை மீண்டும் மலேசியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதில் காவல்துறை பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

அசிலாவின் மேல் முறையீடு சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் இன்று சமர்ப்பிக்கப்படும் என அவரது வழக்கறிஞர் டத்தோ ஹாஸ்மான் அகமட் தெரிவித்துள்ளார்.

இந்த மன்னிப்பு வாரியத்தின் தலைவராக சிலாங்கூர் சுல்தான் செயல்படுவார் என்றும் ஹாஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றம், அல்தான்துன்யா கொலைவழக்கில், அசிலா மற்றும் சிருல் அசார் இருவருக்குமான தூக்குத் தண்டனையை வழங்கியது.

ஆனால் அதற்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்றுவிட்ட சைருல் பின்னர் அங்கு குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டார். தற்போது அவர் அங்கு அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்துள்ளார்

இந்நிலையில் அசிலாவின் மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டு அவருக்கு சிலாங்கூர் சுல்தான் தலைமையிலான சிலாங்கூர் மன்னிப்பு வாரியம் மன்னிப்பு வழங்குமா, தண்டனையைக் குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.