இந்தோனேசியாவிலும், கலிமந்தான் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர் இதுவரை 6 பேரைக் கைது செய்திருந்தாலும் அவர்களின் அடையாளங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
ஜாகர்த்தா தாக்குதல்களைத் தொடர்ந்து இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக உயர்ந்துள்ளது.
அந்தத் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஐவர் தீவிரவாதிகளாவர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
Comments