Home Featured வணிகம் அனைத்து தமிழர்களுக்காகவும், இந்தியர்களுக்காகவும் வருகிறது ரயானி ஏர் – ரவி அழகேந்திரன் அறிவிப்பு!

அனைத்து தமிழர்களுக்காகவும், இந்தியர்களுக்காகவும் வருகிறது ரயானி ஏர் – ரவி அழகேந்திரன் அறிவிப்பு!

777
0
SHARE
Ad

rayani airகோலாலம்பூர் – மலேசியாவின் முதல் ஷரியா – இணக்கம் கொண்ட விமான நிறுவனமான ரயானி ஏர் விமானத்தின் சின்னம் தமிழில் பெயர் பொறிக்கப்பட இருப்பதாக ரவி அழகேந்திரன் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில், நேற்றும் அவர் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அனைத்து தமிழர்களுக்காகவும், இந்தியர்களுக்காவும் விரைவில் வருகிறது ரயானி ஏர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கோலாலம்பூர் – திருச்சிக்கு ரயானி ஏரின் விமானப் போக்குவரத்து துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரவி அழகேந்திரனின் இந்த அறிவிப்பு பல்வேறு ஆருடங்களைக் கிளப்பி உள்ளது.