Home Featured நாடு நஜிப் மீது 37 குற்றச்சாட்டுகள் சிபாரிசா? மறுக்கிறது ஊழல் தடுப்பு ஆணையம்!

நஜிப் மீது 37 குற்றச்சாட்டுகள் சிபாரிசா? மறுக்கிறது ஊழல் தடுப்பு ஆணையம்!

732
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணை அறிக்கையை அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பித்து விட்டது என தகவல்கள் வெளிவரத் தொடங்கியது முதல் அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்ற ஆரூடங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

MACCசரவாக் ரிப்போர்ட் எனப்படும் இணையத் தளம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது 37 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்படுவதற்கு ஊழல் தடுப்பு ஆணையம் சிபாரிசு செய்துள்ளது என்று கூறியுள்ளது.

ஆனால், ஊழல் தடுப்பு ஆணையம் இதனை மறுத்துள்ளது. அதே வேளையில், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மற்றும் 2.6 பில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் அதன் விசாரணை அறிக்கைகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது என்பதையும் ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

தாங்கள் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் சில விளக்கங்களைக் கோரியுள்ளது என்றும் கூடிய விரைவில் தங்கள் தரப்பு விளக்கங்களைத் தருவோம் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையம் சமர்ப்பிக்கும் விசாரணை அறிக்கைகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் நிராகரித்துத் திருப்பி அனுப்பும் என ஏற்கனவே, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கணித்து, ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

அதன்படியே இப்போது நடந்துள்ளது.