Home Featured இந்தியா பரதநாட்டியக் கலைஞர் மிருணாளினி சாராபாய் காலமானார்!

பரதநாட்டியக் கலைஞர் மிருணாளினி சாராபாய் காலமானார்!

752
0
SHARE
Ad

mrinalinisarabhai759அலகாபாத் – இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாயின் மனைவியும், மூத்த பரதநாட்டியக் கலைஞருமான மிருணாளினி சாராபாய் (97) இன்று காலமானார். அவரது மரணம் தொடர்பான அறிவிப்பினை அவரது மகளும் பிரபல பரதநாட்டியக் கலைஞருமான மல்லிக்கா சாரபாய் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ போன்று எண்ணற்ற விருதுகளை பெற்ற மிருணாளினி, அகமதாபாத்தில் மிகப் பெரும் கலைக் கூடம் ஒன்றை நடத்தி வந்தார். அவரிடம் 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரதம், கதகளி போன்ற பாரம்பரிய கலைகளைக் கற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.