Home Featured வணிகம் எண்ணெய், எரிவாயு பணியாளர்களுக்கு கடன் இல்லை – கைவிரித்தது பிஎஸ்என்

எண்ணெய், எரிவாயு பணியாளர்களுக்கு கடன் இல்லை – கைவிரித்தது பிஎஸ்என்

1306
0
SHARE
Ad

BSNகோலாலம்பூர் – எண்ணெய் விலை சரிந்துள்ளதையடுத்து, நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யலாம் என்ற ஆரூடம் நிலவுவதால், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கடன் விண்ணப்பங்களை பிஎஸ்என் வங்கி (Bank Simpanan Malaysia) நிராகரிப்பு செய்து வருகின்றது.

இது குறித்து பிஎஸ்என் வங்கி வியூக தொலைத்தொடர்புத் தலைவர் புஸ்பா மரினா ஓமார் ஸ்டார் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ள தகவலில், தங்களது வங்கி அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அடுத்த 4 ஆண்டுகளில் சுமார் 50 பில்லியன் ரிங்கிட் அளவில் முதலீடுகளையும், செயலாக்க செலவுகளையும் குறைக்கும் நோக்கில் பெட்ரோனாஸ் நிறுவனம் 51,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, பிஎஸ்என் இந்த முடிவை எடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

“வங்கியின் இயக்கம், வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எங்களுக்குள் (வங்கி) எடுக்கப்பட்டது. மேலும் இது தற்காலிகமானது தான்” என்று புஸ்பா மரினா தெரிவித்துள்ளார்.