Home Featured நாடு இஸ்லாம் அல்லாதவர்கள் வீட்டின் முன் பிரார்த்தனை பீடங்கள் வைக்க பெர்லிஸ் அரசு தடை!

இஸ்லாம் அல்லாதவர்கள் வீட்டின் முன் பிரார்த்தனை பீடங்கள் வைக்க பெர்லிஸ் அரசு தடை!

584
0
SHARE
Ad

corridor chinese altar newகங்கார் – கங்காரில் உள்ள ஸ்ரீ செனா அடுக்குமாடிக் குடியிருப்பில் இஸ்லாம் அல்லாதவர்கள் தங்களின் வீட்டின் முகப்பில் பிரார்த்தனை பீடங்களை வைப்பதற்கு பெர்லிஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மாநில அரசாங்கத்தின் இந்த முடிவால் அம்மாநில மசீச மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.

இது குறித்து பெர்லிஸ் மசீச தலைவர் டத்தோ சுவா டீ யோங் கூறுகையில், பல்லின மக்கள் வாழும் நாடான மலேசியாவில் அனைவரின் இனம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுதல் ஆகியற்றுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மாநில நிர்வாகம் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், மக்களின் உணர்வுகளுக்கும், சமூகத்தின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் எடுக்க வேண்டும் என நினைக்கிறோம்”

“லூனார் புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியிருப்பதை எண்ணி வருந்துகின்றோம்” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையெ, மாநில மசீச செயலாளர் லா பாக் சாம் கூறுகையில், இந்த பிரச்சனை குறித்து மாநில வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சித்துறைத் தலைவர் மாட் ஹசானை இன்று சந்தித்துத் தீர்வு காணப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

“வீட்டு முகப்பில் சீனர்கள் ஜேட் எம்பெரர் பீடங்களையும், இந்துக்கள் தங்களது பீடங்களையும் வைத்து வழிபட்டு வருகின்றனர். வராந்தாவை சுத்தம் செய்யும் எந்த ஒரு முடிவையும் ஆதரிக்கிறோம். ஆனால், பீடங்கள் ஓரளவிற்கு சிறிய அளவில் இருக்கும் பட்சத்தில் அதை ஒரு பெரிய விசயமாகக் கருதத் தேவையில்லை” என்று லா பாக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 12- ம் தேதி, பெர்லிஸ் மாநில வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட அறிக்கையில், அங்கு பெரும்பான்மையான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் பிரார்த்தனை பீடங்களை 1 வாரத்திற்குள் அகற்றும் படி உத்தரவிடப்பட்டிருந்தது.

அதை செய்யத் தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

படம், தகவல் – நன்றி (The Star)