கோலாலம்பூர் – கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீருக்கு எதிராக அம்மாநில அம்னோ தலைவர்கள் போர்கொடி தூக்கியுள்ள விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தான் தீர்வு காணும் வரை அம்மாநிலத் தலைவர்கள் எதிர்ப்புகளைக் காட்ட தடை விதித்துள்ளார்.
நேற்று அனைத்துலகப் புத்ரா வர்த்தக மையத்தில் நடந்த கெடா அம்னோ தலைவர்களுடனான கூட்டத்தில், இந்த விவகாரத்தில் தான் அரசியல் ரீதியிலோ அல்லது சட்டப்பூர்வ வகையிலோ தீர்வு காண்பேன் என உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, கெடா அம்னோவில் 15 தொகுதித் தலைவர்களில் 14 பேர் முக்ரிசின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக அம்மாநிலத்தின் அம்னோ துணை தலைவர் டத்தோ அகமட் பாஷா மொகமட் ஹனிபா தெரிவித்துள்ளார்.