Home Featured நாடு 3 தைப்பூச பக்தர்கள் பலி: மோதிய காரை அடையாளம் கண்டது காவல்துறை!

3 தைப்பூச பக்தர்கள் பலி: மோதிய காரை அடையாளம் கண்டது காவல்துறை!

987
0
SHARE
Ad

Thaipusam-2016-accident-கோலாலம்பூர் – இன்று காலை ஸ்ரீ பெட்டாலிங் அருகே நடந்த விபத்தில் மூன்று முருக பக்தர்கள் பலியானதற்குக் காரணமான காரை காவல்துறை கண்டறிந்துள்ளது.

ஸ்ரீ பெட்டாலிங் அருகே நார்த் சவுத் எக்ஸ்பிரஸ்வேயில் காலை 8 மணியளவில், (PMH 718) என்ற எண் கொண்ட பிஎம்டபிள்யூ கார் ஒன்று, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கார் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பலியான மூன்று பக்தர்களின் பெயரையும் காவல்துறை அறிவித்துள்ளது. சரவணன் கிருஷ்ணன் (வயது 45), கண்ணன் சின்னக்கண்ணு (வயது 51) மற்றும் பாப்பா சின்னா (வயது 53) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

மேலும், மகேஸ்வரன் பழனிசாமி (வயது 40), தர்ஷன் டேவரா (வயது 18) மற்றும் மற்றொரு பெண் பக்தரும் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு, நெகிரி செம்பிலான் செனாவாங்கில் இருந்து பத்துமலைக்கு பாதயாத்திரையாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.