Home Featured நாடு 2.6 பில்லியன் நன்கொடை விவகாரம் முடிவுக்கு வந்தது – நஜிப் அறிவிப்பு!

2.6 பில்லியன் நன்கொடை விவகாரம் முடிவுக்கு வந்தது – நஜிப் அறிவிப்பு!

597
0
SHARE
Ad

najib-tun-razakகோலாலம்பூர் – தன் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என சட்டத்துறைத் தலைவர் அறிவித்திருப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வரவேற்றுள்ளார்.

“தற்போது அந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மலேசியர்கள் அதைக் கடந்து செல்ல வேண்டும்.”

“அந்த விவகாரம் தேவையில்லாமல் நாட்டைத் திசை திருப்பிவிட்டது”

#TamilSchoolmychoice

“இப்போது அந்த விவகாரத்திற்கு முழுமையான முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நாம் அனைவரும் ஒற்றுமையாக கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று நஜிப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்த சட்டத்துறைத் தலைவர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.