Home Featured இந்தியா நேதாஜியின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா? – பழைய புத்தகம் வெளியிட்ட பகீர் உண்மை!

நேதாஜியின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா? – பழைய புத்தகம் வெளியிட்ட பகீர் உண்மை!

920
0
SHARE
Ad

Mahatma_Gandhiபுது டெல்லி – கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் காந்திய எதிர்ப்பாராளர்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் அரங்கேறிய பல்வேறு குளறுபடிகள் குறித்து அவ்வபோது பல்வேறு பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். குறிப்பாக, “இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காரணம் மகாத்மா காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ அல்ல. நேதாஜியின் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் தான்” என்பது அவர்களின் முக்கியமான வாதங்களில் ஒன்று.

தற்போது அந்த வாதம் உண்மை என்றே தோன்றும் அளவிற்கு பல்வேறு இரகசியங்கள் அம்பலமாகி உள்ளன. நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு இருந்தார். இவற்றில் உள்ள விசயங்கள், காங்கிரஸ்-பாஜக தரப்பில் விவாதங்களைக் கிளப்பி உள்ள நிலையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி.பக் ஷி, நேதாஜி குறித்து எழுதிய புத்தகம் ஒன்றும், விரைவில் வெளியாக உள்ளது.

அந்தப் புத்தகத்தில், “கடந்த, 1956-ல், கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.பி.சக்ரவர்த்தி, மேற்கு வங்கத்தின் தற்காலிக ஆளுநராகவும் பொறுப்பு வகித்தார். 1947-ல், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்ட, அப்போதைய பிரிட்டன் பிரதமர் கிளமென்ட் அட்லி, 1956-ல், இந்தியா வந்திருந்தார். அப்போது பிரதமர் பதவியை இழந்திருந்த அவர், தற்காலிக ஆளுநர் சக்ரவர்த்தியின் இல்லத்தில் தங்கினார்.”

#TamilSchoolmychoice

netaji“இச்சந்திப்பின்போது, இருவரும் இந்திய அரசியல் பற்றி, நீண்ட நேரம் விவாதித்துள்ளனர். மகாத்மா காந்தி தலைமையில் நடந்த, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தால் பிரிட்டன் அரசுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, சக்ரவர்த்தி கேட்டபோது, மிகக்குறைவான பாதிப்பே இருந்ததாக, அட்லி கூறியுள்ளார். 1947-ல், பிரிட்டன் அரசை அசைத்துப் பார்த்தது நேதாஜியின் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் தான் என்றும், அவரின் நடவடிக்கைகள் பிரிட்டன் இராணுவத்தில் அங்கமாக இருந்த இந்திய வீரர்களுக்கு, பிரிட்டன் அரசு மீதான விசுவாசத்தை குறைத்ததாகவும், அதனால் தான், இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க பிரிட்டன் முடிவு செய்ததாகவும் அட்லி விளக்கம் அளித்துள்ளார்” என்று அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

வெளியாவதற்கு முன்பே இந்திய சுதந்திரத்தின் அடிப்படைக் காரணமாகக் கூறப்பட்டு வந்த ஒன்றை சந்தேகிக்க வைத்துள்ள அந்தப் புத்தகம், வெளியானால் பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது.