Home Featured நாடு 1எம்டிபி: விரைவில் ஆதாரங்களை அனுப்புகிறது சுவிஸ்!

1எம்டிபி: விரைவில் ஆதாரங்களை அனுப்புகிறது சுவிஸ்!

860
0
SHARE
Ad

1mdb3கோலாலம்பூர் – சந்தேகத்திற்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய சுவிஸ் அதற்கான ஆதாரங்களை விரைவில் மலேசிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இந்தத் தகவலை சுவிட்சர்லாந்து சட்டத்துறை அலுவலகத்தின் தகவல் தொடர்புத் தலைவர் ஆண்ட்ரே மார்டி, ‘த மலாய் மெயில்’ பத்திரிக்கைக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி மலேசிய சட்டத்துறை தங்களிடம் தெரிவிக்கும் எனத் தாங்கள் நம்புவதாக ‘த மலேசியன் இன்சைடர்’ பத்திரிக்கைக்கு அனுப்பிய மற்றொரு மின்னஞ்சலில் ஆண்ட்ரே குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice