கோத்தா கினபாலு – சொந்தமாக வங்கி உட்பட பல புதிய திட்டங்களை செயல்படுத்த மாரா (Majlis Amanah Rakyat) திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஊரக மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சர் இஸ்மாயில் சாபெரி யாக்கோப் கூறுகையில், இத்திட்டங்கள் குறித்து நெகாரா வங்கியுடன் பேச இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“வங்கியின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. என்றாலும் அதற்கான ஏற்பாடுகளும் திட்டங்களும் தயாராக உள்ளன” என்று நேற்று இரவு சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், மாரா பல்கலைக்கழகம் (Universiti Majlis Amanah Rakyat- UniMara) இந்த ஆண்டு அமைக்கப்படவுள்ளதாகவும், ஜூன் மாதம் முதல் சேர்க்கை துவங்கிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.