Home Featured உலகம் தாய்லாந்தில் யானை மிதித்து சுற்றுலாப் பயணி பலி!

தாய்லாந்தில் யானை மிதித்து சுற்றுலாப் பயணி பலி!

631
0
SHARE
Ad

Thai Elephantபாங்காக் – தாய்லாந்து கோ சாமுய் தீவில், நேற்று மதியம் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது மகளுடன் யானை சவாரி செய்த போது, அந்த யானை அவரை தூக்கி வீசி காலால் மிதித்துக் கொன்ற சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரெத் கியாவ் (வயது 36) என்பவர் நேற்று திங்கட்கிழமை மதியம் தனது மகளுடன் யானை மீது ஏறி சவாரி செய்துள்ளார். அப்போது கடும் வெயில் காரணமாக ஆத்திரத்தில் இருந்த அந்த யானை அவர்களைத் தூக்கி வீசியுள்ளது.

அப்போது, செயற்கை கால் பொருத்தியவரான அந்த சுற்றுலாப் பயணி ஓட இயலாமல் யானையின் காலில் சிக்கி மிதிபட்டுள்ளார் என சாமுய் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவத்தில் யானைப் பாகனும், காரெத்தின் மகளும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

மியன்மாரைச் சேர்ந்த அந்த யானைப் பாகம் பல வருடங்களாக ‘கோல்ப்’ எனப் பெயர் கொண்ட அந்த யானையுடன் பழகி வருகின்றார். என்றாலும் சம்பவத்தின் போது அவரால் அந்த யானையைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், பாங்காக்கில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகம் தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.

தாய்லாந்தில் சுற்றுலாவிற்காக மட்டும் சுமார் 4,000 பயிற்சியளிக்கப்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்று சீன சுற்றுலாப் பயணிகளுடன் சவாரி செய்த யானை ஒன்று தனது பாகனைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.