Home Featured கலையுலகம் மலேசியா பயணம்: பாஸ்போர்ட்டை எடுக்க மறந்த ரஜினி!

மலேசியா பயணம்: பாஸ்போர்ட்டை எடுக்க மறந்த ரஜினி!

646
0
SHARE
Ad

Superstar-waits-in-Chennai-Airport_SECVPFசென்னை – கபாலி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக நேற்று சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், டிக்கெட் பரிசோதனைக்குச் செல்லும் போது தான், தனது கடப்பிதழை (பாஸ்போர்ட்) வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்துள்ளார்.

நல்லவேளையாக, நேற்று அவரது விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக கிளம்பியதால், உடனடியாக தனது உதவியாளர் வீட்டிற்கு அனுப்பி வைத்து கடப்பிதழை எடுத்துக் கொண்டு வரச் செய்துள்ளார் என தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி செய்தி இணையதளங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

அந்த அவசரமான சூழ்நிலையிலும் கூட, விமான நிலையத்தில் இருந்த செய்தியாளர்களிடம் தனது படப்பிடிப்பு நிலவரம் குறித்தும், தனக்கு மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷன் விருது பற்றியும் மிகவும் பொறுமையாக பதிலளித்துள்ளார் ரஜினி.