Home Featured இந்தியா காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய இராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்!

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய இராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்!

940
0
SHARE
Ad

siachen-pti-759ஜம்மு  – கடந்த புதன்கிழமை, காஷ்மீர் சியாச்சின் பனிச் சிகரத்தில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, புதைந்து போன 10 இராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்‌கள் எனத் தெரிய வந்துள்ளது.

இ‌வர்கள் வேலூர் ‌மாவட்டம் துக்கம்பாறையைச் சேர்ந்த ஏழுமலை, தேனி மாவட்டம் குமணன்தொழுவைச் சேர்ந்‌‌த குமார், மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்த கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் குடிஸ்தானாபள்ளியைச்சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.

நவீன லேசர் கருவிகள் மூலம் பனியில் சிக்கியவர்களை மீட்கும் பணி ‌3-ஆவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

10 பேரும் வீரமரணம் அடைந்தார்கள் என இந்திய இராணுவம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.