குவாந்தான் – பிரதமர் நஜிப் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சில அதிகாரிகள் உட்பட 256 பேருக்கு பகாங் சுல்தான் அகமட் ஷாவின் பிறந்தநாளையொட்டி டத்தோ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
டெலாய்ட் செயல் இயக்குநரான முகமட் நிசார் நஜிப் (படம்) உட்பட ஆறு பேருக்கு டிஎஸ்ஏபி எனப்படும் டத்தோ பட்டம் வழங்கப்பட்டது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத்தலைவரான டத்தோ முகமட் ஜமைடான் அப்துல்லா டத்தோஸ்ரீ பட்டம் பெற்றுள்ளார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆவண மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இயக்குநர் நோர் அஸ்மி கரிம், முதன்மை மூத்த உதவி ஆணையர்களான வான் ரம்லி, அலியாஸ் சலிம் உள்ளிட்ட 85 பேருக்கு டத்தோ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இருபது பேருக்கு செதியா அகமட் ஷா பகாங் (எஸ்ஏபி), 33 பேருக்கு செதியா மஹோடா பகாங் (எஸ்எம்பி), 18 பேருக்கு அஹ்லி அகமட் ஷா பகாங் (ஏஏபி), 52 பேருக்கு அஹ்லி மஹாடா பகாங் (ஏஎம்பி) உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
படம்: நன்றி (The Star)