Home Featured நாடு “அது நன்கொடை அல்ல முதலீடு” – சவுதி அமைச்சரின் கருத்தால் புதிய குழப்பம்!

“அது நன்கொடை அல்ல முதலீடு” – சவுதி அமைச்சரின் கருத்தால் புதிய குழப்பம்!

652
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சவுதி அரச குடும்பத்திடமிருந்து தான் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி வந்தது என்று மலேசியா சொல்லிக் கொண்டிருக்க, சவுதி வெளியுறவு அமைச்சர் அடெல் அல் -ஜூப்ரி அது நன்கொடையாக இருக்காது, முதலீடாக இருக்கலாம் என்று கூறி புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் மேலும் மேலும் குழப்பங்களே நீடித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

சவுதியைச் சேர்ந்தவர் அந்நிதியை அனுப்பியிருக்கலாம் என்றும், அது மலேசியாவில் முதலீடாகத் தான் சென்றுள்ளது எனத் தான் நம்புவதாகவும் கடந்த வியாழக்கிழமை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அடெல் அல் -ஜூப்ரி தெரிவித்துள்ளார்.

2.6 பில்லியன் ரிங்கிட் மறைந்த சவுதி மன்னரிடமிருந்து அரசியல் நன்கொடையாக வந்தது என்றும், தேர்தல் முடிந்தவுடன் அந்நிதி திரும்ப அளிக்கப்பட்டுவிட்டது என்றும் மலேசிய சட்டத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.