மெக்சிகோ – போப் ஆண்டவர் பிரான்சிஸ், பேரார்வம் கொண்ட பக்தர் ஒருவரால் கீழே தள்ளப்பட்ட போது, அவர் தன்னை மறந்து ஆத்திரமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தற்போது காணொளி வடிவில் நட்பூ ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வருகின்றது.
மெக்சிகோவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் 79 வயதான் போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று அங்குள்ள மோரேலியா நகரில் தனது பக்தர்களைச் சந்தித்து ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அங்கு போப் வருவதை அறிந்து ஏராளமானோர் வருகை புரிந்திருந்தனர்.
இந்நிலையில், அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து ஆசி வழங்குவதற்காக, போப் அவர்கள் அருகில் சென்ற போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், முண்டியடித்து போப்பில் இரு கைகளைப் பற்றியுள்ளார்.
இதனால் நிலை தடுமாறிய போப், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு குழந்தை மீது விழும் நிலைக்கு ஆளானார். ஆனால் உடனடியாக அவரது பாதுகாவலர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து நேரான நிலைக்குக் கொண்டுவந்தனர்.
இயல்பு நிலைக்கு வந்த போப்பின் முகம் கோபத்தால் சிவந்திருந்ததோடு, ஆர்வக்கோளாரான அந்த பக்தரைப் பார்த்து ,‘‘சுய நலமாக இருக்காதீர்கள்’’ என்று உரக்க சொல்லிவிட்டு, பின்னர் தனது முகத்தை புன்னகை நிலைக்குத் திருப்பியுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வாடிகன் செய்தித் தொடர்பாளர், மிகவும் ஆர்வக்கோளாறாக நடந்து கொள்ளும் சில பக்தர்களுக்கு, “அது ஒரு இயல்பான மனித உணர்வு வெளிப்பாடு தான்” என்று தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளியை இங்கே காணலாம்:-