Home Featured கலையுலகம் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘ரெமோ’

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘ரெமோ’

839
0
SHARE
Ad

சென்னை- தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக உருவாகியுள்ள  சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரெமோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அந்நியன்’ படத்தில் விக்ரம் ஏற்று நடித்த ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ‘ரெமோ’ என்பது குறிப்பிடத்தக்கது.

sivakarthikeyanசிவகார்த்திகேயன் நேற்று (17 பிப்ரவரி) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவரது புதுப் படத்தின் தலைப்பு நேற்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என அப்படக் குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இருவரும் ஏற்கனவே ஜோடியாக நடித்த ‘ரஜினிமுருகன்’ படம் வசூல் ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதால் இப்புதுப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘ரெமோ’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இளைஞர்களைக் கவரும் நோக்கில் இவ்வாறு தலைப்பு வைத்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இப்படத்துக்கு ‘நர்ஸ் அக்கா’ என்று தலைப்பு வைத்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.