Home Featured கலையுலகம் சிகே, ஷைலா நாயர் நடிப்பில் ‘மயங்காதே’ – மார்ச் மாதம் திரையரங்குகளில்!

சிகே, ஷைலா நாயர் நடிப்பில் ‘மயங்காதே’ – மார்ச் மாதம் திரையரங்குகளில்!

932
0
SHARE
Ad

Mayangathe 1சுபாங் ஜெயா – ‘மைந்தன்’ திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பினை அடுத்து, சிகே, டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய திரைப்படம் ‘மயங்காதே’.

படத் தலைப்பிலேயே ஒரு வித ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் இந்தப் படத்திற்கு பயன்படுத்தப்பட்ட வித்தியாசமான விளம்பர யுத்திகள் மக்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு, கடந்த வாரம் சுபாங் ஜெயாவிலுள்ள உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

Mayangathe 2மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோஸ்ரீ வேள்பாரி, மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், கிம்மா தலைவர் டத்தோ சையத் இப்ராகிம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மலேசியாவின் பிரபல பாடகி திலா லஷ்மண் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் இந்த இசை வெளியீட்டு விழாவை சிறப்பாக வழிநடத்த, படத்தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களின் அனுபவப் பகிர்வு, பாடல்கள் அறிமுகம், நடன நிகழ்ச்சிகள் என்று மிகப் பிரம்மாண்டமான முறையில் விழா நடைபெற்றது.

Mayangatheyஇத்திரைப்படத்தை சிகே பிலிம்ஸ், சாய் பா விஷன், டச் ட்ரானிக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து சுமார் 6 லட்சம் ரிங்கிட் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.ஷைலா நாயர் முதல் முறையாக சாய் பா விஷன் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களை மலேசியாவின் இளம் இசையமைப்பாளர் நிரோஷன் உருவாக்கியுள்ளார். ஓவியா, பிரபு, நிரோஷன், ஹேவோக் பிரதர்ஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

Mayangathe 3மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் வரும் மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படங்கள்: மணிமாலா.

மயங்காதே முன்னோட்டம்:-