Home Featured நாடு மாயமான நாடாளுமன்ற மருத்துவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரம்!

மாயமான நாடாளுமன்ற மருத்துவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரம்!

664
0
SHARE
Ad

doctor-parliament2கோலாலம்பூர் – மாயமான நாடாளுமன்ற மருத்துவர் டாக்டர் பி.சுகுமாறனைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது காவல்துறை.

கடந்த ஒரு மாதமாக நாடாளுமன்ற மருத்துவமனையின் மருத்துவர் சுகுமாறனைக் காணவில்லை என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் நேற்று காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, டாக்டர் சுகுமாறனின் உறவினர் டி.நித்தியானந்தன் (வயது 43) என்பவரை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறைக் கேட்டுக் கொண்டுள்ளதாக டாங் வாங்கி ஓசிபிடி துணை ஆணையர் சைனோல் சாமா தெரிவித்துள்ளார்.

“கோலாலம்பூர் மருத்துவமனைக்கு எங்கள் அதிகாரிகளை அனுப்பி, அங்குள்ள அதிகாரிகளிடம் அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட முயற்சி செய்து வருகின்றோம்” என்று சைனோல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மருத்துவர் சுகுமாறன் மாயமான விவகாரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்திருக்குமோ? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள சைனோல், தற்போதைக்கு தன்மூப்பாக எதையும் கூற முடியாது என்றும், விசாரணை செய்ய தங்களுக்கு இன்னும் சில நாட்கள் தேவை என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் சுகுமாறனைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால், குலசேகரன் 012 -5034346 அல்லது நித்தியானந்தன் 016-2179619 என்ற எண்களையோ அல்லது அருகிலுள்ள காவல்நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.