Home Featured நாடு வங்கதேச ஒப்பந்தம் கையெழுத்தானது: 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வருவது உறுதி!

வங்கதேச ஒப்பந்தம் கையெழுத்தானது: 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வருவது உறுதி!

1004
0
SHARE
Ad

bs0310கோலாலம்பூர் – 1.5 மில்லியன் வங்கதேச தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முடிவு பற்றி, மலேசியர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும், கொந்தளிப்புகளும் எழுந்தாலும் கூட அதை சட்டை செய்யாமல் இன்று வங்கதேசத்துடனான அந்த ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டுள்ளது.

தாக்காவில் இன்று காலை 10 மணியளவில் (மலேசிய நேரப்படி 12 மணியளவில்), அந்நாட்டின் வெளிநாடு வாழ் வங்கதேசத்தினரின் நலம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சர் நூருல் இஸ்லாம் மற்றும் மலேசிய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்டு ரியாட் ஆகிய இருவரும் ஜி2ஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ‘டெயிலி ஸ்டார்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, அடுத்த மூன்றாண்டுகளில் 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

#TamilSchoolmychoice

அவர்களுக்கு தலா 1,946 ரிங்கிட் லெவி வசூல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தம் குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியுடன் பேசுவதாகத் தெரிவிருந்தார்.