Home Featured நாடு ஆஸ்திரேலியா செல்லும் மலேசியர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் – நஸ்ரி பதிலடி!

ஆஸ்திரேலியா செல்லும் மலேசியர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் – நஸ்ரி பதிலடி!

547
0
SHARE
Ad

nazriபுத்ராஜெயா – மலேசியாவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை தனது இணையதளத்தில் கூறியிருந்தது.

இந்நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக  இன்று கருத்து தெரிவித்துள்ள மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அசிஸ், மலேசியாவிற்கு மட்டுமல்ல ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“பாரிஸ், லண்டன், பிராங்பர்ட் ஆகியவற்றுக்கும் தீவிரவாத மிரட்டல் உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு அது இன்னும் அதிகமாக உள்ளது.”

#TamilSchoolmychoice

“எனவே என்னைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா தங்களது குடிமகன்களுக்கு அறிவுறுத்தியிருப்பது ஒரு பெரிய விசயமே அல்ல. ஆஸ்திரேலியாவிற்கு இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் அங்கு நிலவும் இனவாதப் பிரச்சனைகளை சுட்டிக் காட்டி நாம் கூட ஆஸ்திரேலியா செல்லும் நமது மலேசியர்களுக்கு அறிவுறுத்தலாம்” என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நஸ்ரி தெரிவித்துள்ளார்.