Home Featured கலையுலகம் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் சங்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் சங்கம்!

580
0
SHARE
Ad

?????????????????????????????????????????????????????????

சென்னை – சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. இனி தேர்தல் முடியும் வரை நாடகங்கள் போடுவதற்கு அந்தந்த உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்காது. இதனால் நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்காக இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தேர்தல் ஆணையரைச் சந்தித்த நடிகர் பொன்வண்ணன், புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதாவது, தேர்தலில் மக்கள் அனைவரும் அவர்களது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தும் படியாக பரப்புரை செய்யும் பொறுப்பை நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

அதேவேளையில், தேர்தல் நேரத்தில் நாடகங்கள் நடத்துவதற்கு விதிக்கப்படும் தடை குறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் பேசி சரி செய்வதாகவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

மக்கள் மத்தியில் சேவையாற்றக் கிடைத்த இந்த வாய்ப்பை எண்ணி நடிகர் சங்கம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது.