இதனையடுத்து, நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பரிசோதனை நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் அவர் நேற்று மாலையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போது ‘கபாலி’, ‘2.0’ என ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் ரஜினி நடித்து வருவதாலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருவதாலும் அவருக்கு இந்த திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments