Home Featured நாடு ஜோகூர் சுல்தான் வாங்கியிருக்கும் போயிங் 737 விமானம்!

ஜோகூர் சுல்தான் வாங்கியிருக்கும் போயிங் 737 விமானம்!

752
0
SHARE
Ad

SULTAN_OF_JOHOR_BOEING_737_250216கோலாலம்பூர் – ஜோகூர் அரச சின்னம் மற்றும் பணியாளர்களின் உடுப்புகளுடன் கூடிய போயிங் 737 – 800 விமானம் வாஷிங்டனின் எவரெட்டில் காணப்பட்டுள்ளதாக யாஹூ மற்றும் மலேசியன் இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது.

போயிங் பிசினஸ் ஜெட் 2 என்று அடையாளப்படுத்தப்படும் இந்த விமானம் 10 மணிநேரங்களுக்கு தொடர்ந்து பறக்கக் கூடிய திறன் கொண்டனது.

ஜோகூர் அரச முத்திரையுடன் தங்க நிறத்தில் உள்ள இந்த விமானம், ஜோகூர் சுல்தான் சுல்தான் இஸ்கண்டரின் தேவைக்கேற்ப வகையில் பல சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விமானிக்கான உரிமம் வைத்துள்ளவரான ஜோகூர் சுல்தான், கார்கள், இரயில், விமானம் போன்றவற்றை இயக்குதில் ஆர்வம் கொண்டவர்.

வாஷிங்டனில் இருந்து இன்னும் சில வாரங்களில் ஜோகூர் பாருவிற்கு அவ்விமானம் கொண்டு வரப்படவுள்ளதாக ‘த மலேசியன் இண்சைடர்’ கூறியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, ஜூன் 30-ம் தேதி, ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் 31-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு விமானம் ஒன்றைப் பரிசாக அளித்தார் ஜோகூர் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.