Home Featured நாடு மகாதீர் அம்னோவிலிருந்து விலகியது அதிர்ச்சியாக இல்லை – நஜிப் கருத்து!

மகாதீர் அம்னோவிலிருந்து விலகியது அதிர்ச்சியாக இல்லை – நஜிப் கருத்து!

600
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கோலாலம்பூர் – அம்னோவில் இருந்து துன் டாக்டர்.மகாதீர் முகமட் விலகியது தனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக பணியாற்றி வரும் அம்னோவின் போராட்டத்தை, மகாதீர் விலகல் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் அம்னோ தலைவருமான நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“அம்னோவைப் பொறுத்தவரையில், எங்களது திட்டங்களின் படி தொடர்ந்து பணியாற்றுவோம் காரணம் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் எங்களுக்கு நிறைய உள்ளது”

“நாங்கள் எங்களது போராட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம், அதனால் அம்னோ சவால்களை எதிர்கொள்வதில் வலுவடையும், குறிப்பாக அடுத்த பொதுத்தேர்தல்” என்று நேற்று ஜெட்டாவில் இருந்து நஜிப் இவ்வாறு தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.