Home Featured நாடு “அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள்” – மொகிதினுக்கு சாஹிட் வலியுறுத்து!

“அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள்” – மொகிதினுக்கு சாஹிட் வலியுறுத்து!

665
0
SHARE
Ad

zahid-muhyiகோலாலம்பூர் – தனது அடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில், அவசரப்பட்டு எந்த ஒரு பாதகமான முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஒரு முடிவை மொகிதின் எடுத்தாலும், அவர் அம்னோவிற்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நினைவில் இருக்கட்டும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டமொன்றில் பேசிய சாஹிட், “எனக்குத் தெரிந்து, மொகிதின் ஒரு தீவிரமான அம்னோ உறுப்பினர். தற்போதைய சூழ்நிலையில் அவர் அம்னோ துணைத்தலைவராக இல்லாவிட்டாலும் கூட, பாகோ மக்களின் பிரதிநிதியாக உள்ளார். அது தான் முக்கியம்”

#TamilSchoolmychoice

“எனவே சோகமாக அல்லது கோபமாக இருக்கும் போது எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம் என நான் டான்ஸ்ரீ-ஐ ( மொகிதினை) கேட்டுக் கொள்கிறேன். மாறாக கட்சி பயனடையும் வகையில் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அவர் யோசிக்க வேண்டும்” என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.