Home Featured தமிழ் நாடு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டி – சீமான் அறிவிப்பு!

இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டி – சீமான் அறிவிப்பு!

1087
0
SHARE
Ad

seemanசென்னை – தமிழக சட்டசபை தேர்தலில் ‘நாம் தமிழர்’ கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப்போவதாக ‘நாம் தமிழர்’ கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் சீமான் இன்று அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கட்சிக்கு, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கிடைத்துள்ளது. இந்த சின்னத்தில் நாம் தமிழர் போட்டியிடும். திமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும், கொள்கை என்று ஒன்று கிடையாது. நாம் தமிழர் மாற்றாக இருக்கும் என சீமான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நிகழ்ச்சியொன்றில் பேசிய சீமான், சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெறாவிட்டால், கட்சியை கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன் என சவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.