படப்பிடிப்பில் இருக்கும் போது, நாளொன்றில் அவர் 30 கேன்கள் வரை பெப்சி குடிப்பார் என்றும், எப்போதும் கொழுப்பு நிறைந்த உணவுகளையே தேர்ந்தெடுத்து உண்பார் என்றும் அவருடன் பணியாற்றியுள்ள சிலர் பேஸ்புக் போன்றவற்றில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அத்தகவலை பல இணையதளங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், ராஜேஷ் பிள்ளையின் நண்பரும், மருத்துவருமான டாக்டர் ரோனி டேவிட் அத்தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார்.
அவ்வாறு அளவுக்கு அதிகமாக பெப்சி குடிக்க ராஜேஷ் ஒன்றும் முட்டாள் அல்ல என்று குறிப்பிட்டுள்ள ரோனி, ஒரு கேன் 250 மி.லி என்று வைத்துக் கொண்டாலும், 250 மி.லி * 30 = 7.5 லிட்டர் பெப்சியை எப்படி ஒருவரால் ஒருநாளில் குடிக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ், ‘வேட்டா’ படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அதிகமான வேலை காரணமாக அவரால் தொடர்ந்து சிகிச்சை பெற இயலாமல் போனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, கல்லீரல் பாதிப்பு அவரது பரம்பரை வியாதியாக இருந்து வந்துள்ளது. ராஜேஷின் தாயாரும், மாமாவும் கூட அந்நோயால் தான் மரணமடைந்துள்ளனர் என்ற தகவலையும் ரோனி பகிர்ந்துள்ளார்.
கடைசியாக ரோனி இயக்கிய ‘வேட்டா’ என்ற திகில் படம் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்று வரும் சூழ்நிலையில், படம் வெளியான மறுநாளே அவர் மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.