Home Featured உலகம் மதுவுக்கு அடிமையாகும் இலங்கை மக்கள்!

மதுவுக்கு அடிமையாகும் இலங்கை மக்கள்!

545
0
SHARE
Ad

news_30-07-2014_17aa

கொழும்பு – இலங்கையில் 40% ஆண்களும், 2% பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் மதுவுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

காலி மாவட்டத்தில் மது ஒழிப்பு திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்ட ஹெல்தி லங்கா நிலையத்தின் உரிமையாளர் சாமிக ஜயசிங்க இந்த தகவலை தெரிவித்தார். மது அருந்துவதால் 33.4 % பேர் ஈரல் அழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த நோயால் இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20% பேர் மதுவால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என சாமிக ஜயசிங்க தெரிவித்தார்.