Home Featured நாடு “அம்னோவில் தொடர்வேன்-சங்கப் பதிவகத்திடம் விளக்கம் கேட்பேன்” மொகிதின் அறிவிப்பு!

“அம்னோவில் தொடர்வேன்-சங்கப் பதிவகத்திடம் விளக்கம் கேட்பேன்” மொகிதின் அறிவிப்பு!

905
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassinகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை காலை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் அம்னோ துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், தான் தொடர்ந்து அம்னோவில் நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அதே வேளையில், தான் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது அம்னோவின் அமைப்பு சட்டவிதிகளுக்கு ஏற்ப செய்யப்படவில்லை எனத் தான் கருதுவதால், இது குறித்து விளக்கம் கேட்க சங்கப் பதிவகத்தைத் தான் அணுகவிருப்பதாகவும் மொகிதின் அறிவித்துள்ளார்.

தனது தரப்பை எடுத்து விளக்க தனக்கு அவகாசமோ, வாய்ப்போ வழங்கப்படவில்லை என்றும் அம்னோவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முன்னால் தான் விசாரிக்கப்படவில்லை என்றும் மொகிதின் மேலும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)