Home Featured கலையுலகம் நடிகர் கலாபவன் மணி காலமானார்!

நடிகர் கலாபவன் மணி காலமானார்!

666
0
SHARE
Ad

Kalabhavan-maniசென்னை – பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45 தான்.

பல தமிழ்ப்படங்களிலும் கலாபவன் மணி நடித்துள்ளார். அவர் நடித்து அண்மையில் வெளிவந்த படம் கமலஹாசனின் பாபநாசம். அந்தப் படத்தில், கமலஹாசனுக்குத் தொந்தரவு கொடுக்கும் போலீஸ்காரராக நடித்திருந்தார் கலாபவன் மணி.

பலகுரலில் மிமிக்ரி செய்யும் திறமையும் படைத்தவர் கலாபவன் மணி. பல மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

kalabhavan-mani-papanasam

பாபநாசம் படத்தில் போலீஸ்காரராக நடித்தவர் கலாபவன் மணி..

கேரளாவில் உள்ள கொச்சின் நகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தொற்று காரணமாக கலாபவன் மணி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல், உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலமானார்.