Home Featured கலையுலகம் நடிகர் கலாபவன் மணி மறைவுக்கு மோடி-கமல் உள்பட பல நடிகர்கள் இரங்கல்!

நடிகர் கலாபவன் மணி மறைவுக்கு மோடி-கமல் உள்பட பல நடிகர்கள் இரங்கல்!

614
0
SHARE
Ad

kalabhavan maniபுதுடெல்லி – நடிகர் கலாபவன் மணி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கமல் மற்றும் பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கலாபவன் மணியின் திடீர் மறைவுக்கு வேதனை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பன்முக தன்மை கொண்ட கலாபவன் மணியின் திரையுலக பயணம் பாதியில் முடிந்துவிட்டது. மேலும்  கலாபவன் மணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதே போல், பல சினிமா நடிகர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமலும் கலாபவன் மணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய நண்பர் கலாபவன் மணியின் மறைவு எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

kamalநுரையீரல் பிரச்சினையால் என்னுடைய மலையாள சகோதரர் இறந்து போயிருப்பது வேதனையை தருகிறது. அவருக்கு நிறைய திறமை இருந்தது, ஆனால் வாழ்வதற்கு நேரம் போதவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கமலுக்கு மலையாள திரையுலகுடன் ஒரு பெரிய நெருக்கமுண்டு. மலையாள நடிகர்கள் பலரையும் தன் படங்களில் அவர் அதிகம் பயன்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த ‘பாபநாசம்’ படத்திலும் கலாபவன் மணி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

கலாபவன் மணி எத்தனையோ தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், கமலுடன் இணைந்து நடித்தது இந்த ஒரு படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா போன்று பல முன்னனி நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.