Home Featured தமிழ் நாடு கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி – ப.ஜ.க தமிழிசை!

கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி – ப.ஜ.க தமிழிசை!

619
0
SHARE
Ad

tamilisai_1கடலூர் – சரியான கூட்டணி அமையாவிட்டால் பா.ஜ.க. தனித்து போட்டியிட தயாராக உள்ளது என்று ப.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெய்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ”தேர்தல் மேலிட பார்வையாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே எங்கள் கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் பேசி வருகிறார். இந்த தேர்தலில் கூட்டணி சிறப்பாக அமையாவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பா.ஜ.க. வலுவான நிலையில் தயாராக உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 2 கூட்டணி அமைந்துள்ளது. அதில், மக்கள் நலக் கூட்டணியால் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்கனவே நிராகரித்து உள்ளனர்.

#TamilSchoolmychoice

பா.ஜ.க. தலைமையில் அமைய உள்ள கூட்டணி வளமான தமிழகத்தையும், ஊழலற்ற ஆட்சியையும் கொடுக்கும். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன.

தமிழக அரசு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக பல அறிவிப்புகளை அ.தி.மு.க. அரசு வெளியிட்டது. அதில், மதுவிலக்கு குறித்த அறிவிப்பும் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அந்த அறிவிப்பு வராதது பா.ஜ.க.விற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழங்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் தமிழர்களின் உணர்ச்சியை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தும் விதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என்றார்.