Home Featured நாடு இனி புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அனுமதியில்லை – சாஹிட் அறிவிப்பு!

இனி புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அனுமதியில்லை – சாஹிட் அறிவிப்பு!

735
0
SHARE
Ad

Ahmad Zahid Hamidiகோலாலம்பூர் – புதிதாக 1.5 பில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவில் வேலைக்கு அமர்த்துவது குறித்து எழுந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி புதிதாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தப் போவதில்லை என்றும் துணைப்பிரதமர் சாஹிட் ஹமீடி இன்று அறிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும் சாஹிட் ஹமீடி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருக்கும் நிறுவனங்கள், இனி மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அவர்களின் பணி உரிமம் காலாவதியாகும் வரைப் பயன்படுத்திக் கொள்ளும் படியும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.