Home Featured இந்தியா சட்டீஸ்கர் கரடி தாக்கி வனஅதிகாரி உட்பட மூன்று பேர் பலி!

சட்டீஸ்கர் கரடி தாக்கி வனஅதிகாரி உட்பட மூன்று பேர் பலி!

866
0
SHARE
Ad

bear attacராய்ப்பூர் – சட்டீஸ்கர் மாநிலம் மாகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள நவாஹாரோன் கிராமத்தை சேர்ந்த தன்சிங் கன்வார், சத்ருகன் கன்வார் ஆகிய 2 பேர் விறகுகள் மற்றும் பூக்களை சேகரிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு இருந்த கரடி ஒன்று இருவரையும் தாக்கி கொன்றது. அவர்களது உடல்களை கைப்பற்றிய உறவினர்கள் இதுபற்றி பாத்வா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

bearattaciஅதன்பேரில் கூடுதல் வனஅதிகாரி ஷாகில் தலைமையில் வனகாவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கரடியை தேடினார்கள். அப்போது புதரில் பதுங்கி இருந்த கரடி திடீரென வனஅதிகாரி ஷாகில் மீது பாய்ந்து அவரை தாக்கி கொன்றது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் கரடியை சுட்டுக்கொன்றனர்.