Home Featured நாடு கிள்ளானில் பெட்டியில் பெண்ணின் சடலம்: விசாரணைக் குழு அமைத்தது காவல்துறை!

கிள்ளானில் பெட்டியில் பெண்ணின் சடலம்: விசாரணைக் குழு அமைத்தது காவல்துறை!

582
0
SHARE
Ad

11217161_744587928975996_6969812960182893159_nசுபாங் ஜெயா – கிள்ளானில் நேற்று பெட்டி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு பணிக்குழு ஒன்றை நியமித்துள்ளது காவல்துறை.

பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு அவரது சடலம் அப்பெட்டியில் அடைக்கப்பட்டு வீசப்பட்டிருக்கின்றது.

மேருவில், கம்போங் புக்கிட் காப்பாரில், ஜாலான் பெலிம்பிங் என்ற இடத்தில் இருந்த கழிவுநீர் கால்வாய் ஒன்றில் கிடந்த அப்பெட்டியில் அழுகிய நிலையில் பெண் பிணம் இருந்தது நேற்று காலை 11.30 மணியளவில் கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ அப்துல் சமா மட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் இந்தத் தகவல் பரபரப்பாக பகிர்ந்துகொள்ளப்பட்டது. கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி உறுப்புகளை அகற்றிவிட்டு இது போன்று பெட்டிகளில் அடைத்து வீசிவிடுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அத்தகவல்களை மறுத்துள்ள அப்துல் சமா மட், பொதுமக்கள் யாரும் அது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணின் சடலம் அடையாளம் தெரியாத அளவிற்கு அழுகிய நிலையில் இருப்பதால், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் அப்துல் சமா மட் தெரிவித்துள்ளார்.